THOUGHTS

**The youth needs to develop an attitude : I can do it! We can do it !! India will do it!!! ""மரங்களை நடுவோம் பசுமை இல்ல விளைவை தடுப்போம்"" !!! PLEASE DO IT**

Wednesday, December 7, 2011

IAS தேர்வுகளுக்கு இலவச பயிற்சி


சென்னை : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி, சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் அரசுசார் பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறது.
அடுத்தாண்டு மே மாதம் நடக்கும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 10ம் தேதி கல்லூரி வளாகத்தில் துவங்குகிறது.
இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் ராஜாராமன் கூறும்போது, "இவ்வகுப்புகள், சனிக்கிழமை மாலை 6 முதல், இரவு 8 மணி வரையும், ஞாயிறுக்கிழமை மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறும். இதில் பங்குபெற, ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இப்பயிற்சியை பெறலாம். விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களை, 044 - 2835 0297, 81488 94099 ஆகிய எண்களில் பெறலாம்" என்றார்.

No comments:

Post a Comment